Questions? +1 (202) 335-3939 Login
Trusted News Since 1995
A service for global professionals · Wednesday, January 16, 2019 · 473,749,558 Articles · 3+ Million Readers

ஈழத் தமிழர்களுக்கான பொதுவாக்கெடுப்பை நடாத்த கோரி உலகளாவிய ரீதியிலான பிரச்சாரப்பணி ஆரம்பம்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

'தமிழர் தலைவிதி தமிழர் கையில்'

முன்னாள் ஐ.நா. உதவி செயலாளர் நாயகம் அட்ரியனஸ் மெல்கெர்ட் Adrianus (Ad) Melkert உட்பட பல பிரபல சர்வதேச முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளும் கனடா நிகழ்வு

ரொறன்ரோ , கனடா , April 13, 2018 /EINPresswire.com/ --

'தமிழர் தலைவிதி தமிழர் கையில்' எனும் முழக்கத்துடன் பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தின் முதலாவது மக்கள் அரங்கம் கனடாவின் ரொறன்ரோ பெருநகரில் இடம்பெறுகின்றது. ஈழத்தமிழ் மக்களின் அரசியற்தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பே சிறந்த பொறிமுறையாக அமையும் என்ற நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தினை ( Yes To Referendum ) உருவாக்கியிருந்தது.

தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் உள்ள ஈழத்தமிழ் மக்களிடத்தில், அவர்களே தமது அரசியற் தலைவிதியைத் தீர்மானிக்கும் வகையில் பொதுவாக்கெடுப்பு ஒன்று நடாத்தப்பட வேண்டும் என கோரிக்கையுடன் தனது செயற்பாட்டை இந்த இயக்கம் கொண்டுள்ளது. இதனுடைய முதல் மாநாடாக 'மக்கள் அரங்கம்' கனடாவின் ரொறன்ரோ பெருநகரில் எதிர்வரும் ஏப்ரல் 15 ஞாயிறன்று Metropolitan Centre, 3840 Finch Ave E, Toronto ON M1T 3T4 எனும் இடத்தில் மாலை 3மணிக்கு இடம்பெற இருக்கின்றது.

தமிழர் தேசம் தனது அரசியல் நிகழ்ச்சிநிரலை தானே தீர்மானிக்கும் வகையில் வியூகம் அமைத்து செயற்படுதல் அவசியமானதாகும். சிறிலங்கா ஆட்சியாளர்களது, அனைத்துலக அரசுகளதும் நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டு எதிர்வினையாற்றுவதற்குப் பதிலாக, எமக்கான அரசியல் அரங்கை நாம் எவ்வாறு அமைத்துக் கொள்ளலாம் என்பது குறித்து நாம் ஆழமாகச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டியதொரு காலகட்டத்தில் இருக்கிறோம்' என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

முன்னாள் ஐ.நா. உதவி செயலாளர் நாயகம் அட்ரியனஸ் மெல்கெர்ட் Adrianus (Ad) Melkert உட்பட பல பிரபல சர்வதேச முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளும் நிகழ்வு. அமைதியும் ஜனநாயக பூர்வமானதுமான வழியினூடாக நிரந்தரத் தீர்வொன்றைக் கண்டடையும் நோக்குடன் தமிழ் மக்கள் தமது அரசியல் குறிக்கோளைத் தீர்மானிப்பற்கான பொதுவாக்கெடுப்பு ஒன்றை நடாத்துமாறு கோரிக்கை.

இந்த நிகழ்வினைத் தொடர்ந்து வெவ்வேறு நாடுகளில், ஒரு பொதுவாக்கெடுப்பின் மூலம் தமிழ் மக்களின் அரசியற் குறிக்கோளை முடிவு செய்வதையும், அதன் மூலம் நீண்டகாலமாக இலங்கைத் தீவில் நிலவிவரும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர காண்பதையும் நோக்காகக் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளும், மாநாடுகளும் நடாத்தப்படவுள்ளன.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் முன்வைக்கப்படும் பொதுவாக்கெடுப்பு, சுதந்திரமான தனியரசுத் தீர்வுக்கு ஆம் அல்லது இல்லை என்று மட்டும் வாக்களிப்பதற்கான பதிலாக அது: ஒற்றையாட்சி, சமஸ்டி ஆட்சி , கூட்டாட்சி (Confederation), சுதந்திரமான தனியரசு (தமிழீழம்), போன்ற நான்கு தெரிவுகளை உள்ளடக்கிய ஒன்றிற்கானதாகவே அமையவுள்ளது.

உலகளாவிய ரீதியில் நிலவிய நீண்டகால வன்முறைகள் நிறைந்த பல முரண்பாடுகள் இவ்வாறான பொது வாக்கெடுப்பின் மூலமாக வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. சர்வதேச நடைமுறைகளும் இதை உறுதிப்படுத்துகின்றன. தென் சூடானிலும் சரி (Machakos Protocol), பெரிய வெள்ளி ஒப்பந்தம்., சேர்பியன் மொண்டேனெகிரின் ஒப்பந்தம், பப்புவா-நியூகினியா- போகன்வில்லா சமாதான ஒப்பந்தம் போன்றவற்றிலும் சரி எல்லாமே, தேசியப் பிரச்சினைகள் ஒரு பொதுவாக்கெடுப்பு மூலமாகவே தீர்க்கப்படவேண்டும் என்ற தீர்மானத்தை அடிப்படையாகன் கொண்டவையே. இன்னும் சில உதாரணங்களை சொல்வதானால், கிழக்கு தீமோர்,ஸ்கொட்லாண்ட்,கொசோவோ, கியூபெக் என்பவற்றைக் குறிப்பிடலாம்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், பொதுவாக்கெடுப்பு மூலம் வரவுள்ள மக்களின் முடிவை, தாம் ஏற்றுக்கொள்வோம் என்று தெரிவித்துள்ளது. இலங்கை செய்தித்தாளொன்றுக்கு இது தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அளித்த: "தமிழர்கள் ஒரு பொது வாக்கெடுப்பின் மூலமாக தமது அரசியற் குறிக்கோளை முடிவு செய்ய வேண்டும்: இந்த முடிவை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும்- ருத்திரகுமாரன்" என்ற தலைப்பிலான பேட்டியின் விபரத்தை இந்த இணைய முகவரியில் பார்க்கலாம்: https://world.einnews.com/pr_news/415394868/

அதேவேளை, இலங்கை அரசின் இறுக்கமான சிங்கள பௌத்த இனவாதப் போக்கின் தன்மை காரணமாக, பூரண சுதந்திரத்தின் மூலமாக மட்டுமே தமிழ் மக்கள் கௌரவத்துடன் கூடிய சமாதானத்துடன் வாழமுடியும் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நம்புகிறது.

1958,1977,1983 ஆம் ஆண்டுகளிலும் மற்றும் 2009 ஆண்டு முள்ளிவாய்க்காலிலும் தமிழ் மக்கள்மீது நடாத்தப்பட்ட படுகொலைகள், தமிழ் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுக்கென சிறீலங்கா இராணுவத்தினர் இயக்கிவந்த முகாம்கள் பற்றிய அண்மைய அறிக்கைகள் என்பனவே நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இப்படி நம்புவதற்கும் தீர்மானிப்பதற்கும் ஆதாரமான காரணங்களாகும்.

மறைந்த ஊடகவியலாளடர் தார்சி விற்றாச்சி அவர்கள் : “Emergency 58” என்று ஒரு நூலை எழுதியிருந்தார். இந்த நூல்,1958 இல் தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்ட படுகொலைகள் நடந்து முடிந்த உடனேயே எழுதப்பட்ட ஒரு நூல். அவர் அந்த நூலை “ சிங்களவர்களும் தமிழர்களும் தமது பாதைகளில் பிரிந்துசெல்லத் தீர்மானித்து விட்டார்களா?” என்ற கேள்வியுடன் முடித்திருப்பார்.

தமிழர்கள் 1958 படுகொலைகள் நடந்த காலத்திலிருந்து இந்தக் கேள்வியை கேட்டுக் கொண்டே வந்ததுடன், 1977 பொதுத் தேர்தலில் தனித் தமிழீழத்தினை உருவாக்குவதற்கு பெருமளவிலான ஆதரவை தெரிவித்து வாக்களித்துமிருந்தனர்.

தகவல் தொடர்புகளுக்குகளுக்கு:
Email: referendum@tgte.org
Phone: +1- 416-751- 8483 Ext. 2

English: https://www.einnews.com/pr_news/441333091/world-wide-campaign-launched-calling-for-referendum-for-tamils-in-sri-lanka-dignitaries-joining-event-in-canada-tgte

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
Transnational Government of Tamil Eelam (TGTE)
+1- 416-751- 8483 Ext. 2
email us here

Powered by EIN Presswire


EIN Presswire does not exercise editorial control over third-party content provided, uploaded, published, or distributed by users of EIN Presswire. We are a distributor, not a publisher, of 3rd party content. Such content may contain the views, opinions, statements, offers, and other material of the respective users, suppliers, participants, or authors.

Submit your press release